Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 12 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
போதைப்பொருள் பாவனை தீயசெயல்களுக்கு இட்டுச்செல்வதுடன், சமூகத்தில் நன்மதிப்பையும் இழக்கச்செய்யுமென்று அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்கடர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.
புகைத்தலால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கும் சமூகப் பிரதிநிதிகளுக்கும் விளக்கமளிக்கும் கருத்தரங்கு, அட்டாளைச்சேனை கோணாவத்தை சுகாதார நிலையத்தில் இன்று (12) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போதைய காலச்சூழலில் போதைப்பொருள் பாவனை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இன்று பலர் போதைப் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர். புகைத்தல் பழக்கம் சிலரிடம் சிறுபராயத்திலிருந்தே ஆரம்பமாகிவிடுகின்றது. இதனால், இவர்கள்; சிறுபராயத்திலிருந்தே புகைத்தலுக்கு அடிமைகளாகி விடுகின்றார்கள்.
புகைப் பிடிப்பவர்கள் அப்பழக்கத்திலிருந்து விடுபடுவதென்பது இலகுவான காரியமல்ல. புகையிலையில் அடங்கியுள்ள நிக்கெட்டின் இரசாயனப் பதார்த்தம் பல தீய விளைவுகளை உண்டுபண்ணுகின்றது. எனவே, இவ்வாறான தீய செயல்களில் நாம் ஈடுபடுவதிலிருந்து விடுதலை பெற்று, சமூகத்தில் நற்பிரஜைகளாக மிளிர்வதற்கும் நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும்' என்றார்.
6 minute ago
15 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
33 minute ago