Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 06 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
தேசிய அடையாள அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆட்பதிவுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களது நன்மைகளையும் கருத்திற் கொண்டே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் இம்முறை தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் எவரேனும் தமக்கான தேசிய அடையாள அட்டைக்கான பதிவுகளை இதுவரையில் மேற்கொள்ளாதிருப்பின் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அடையாள அட்டைக்கான பதிவுகளை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரையில் 260,000க்கும் அதிகமான அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் 140,000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலைகளில் கல்வி கற்கும் 16 வயதினை தாண்டிய மாணவர்களது பெயர் விவரங்களையும் அவர்களது தகவல்களையும் அடையாள அட்டை பெறுவதற்காக விரைந்து அனுப்பி வைக்குமாறு பாடசாலை அதிபர்களிடம் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025