Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 07 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.கார்த்திகேசு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பற்கு இன்று பல்வேறு தீயசக்திகள் சதிமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் தேசியத்தை வளர்ப்பதை விட, பாதுகாப்பதே மிக முக்கியம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான எம்.குணசேகரம் சங்கர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேசசபை, மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்; தங்களின் தனிப்பட்ட மற்றம் அரசியல் கொள்கை ரீதியான முறன்பாடுகளை மறந்து தமிழ் தேசியத்தின் பாதையில் ஒற்றுமைபட்டு செயலாற்ற வேண்டிய காலம் வந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள ஏனைய தமிழ் கட்சிகளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஈழவர் புரட்சி முன்னணி கட்சி ஆகிய தமிழ் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு வடக்கு, கிழக்கில் ஒன்றுபட்டு தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தில் பலம்மிக்க சக்தியாக திகழ வேண்டும்.
தமிழ் தேசியத்தை பாதுகாப்பதனூடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025