Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 07 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை கரையோர மாவட்டக் கோரிக்கையிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை எனவும் அதனை வென்றெடுத்தே தீருவோமெனவும் முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், நேற்று செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தர்.
எதிர்வருகின்ற பொதுத்தேர்தல் தொடர்பில் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைப்படுமாயின் அந்த இணைந்த வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு தனியான அலகு ஒன்று அமைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நின்றார்.
ஆனால் இன்றைய நிலைமையில் அத்தகைய கோரிக்கைக்கு செல்ல வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை. இருந்தும் அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக செறிந்து வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களின் கருமங்களையும் நிருவாகத்தினையும் தடையின்றி மேற்கொள்வதற்கான ஒரு கரையோர மாவட்டத்தினை முஸ்லிம் காங்கிரஸ் கோரிவருகின்றது.
அரசியலில் தங்களது ஆதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையினைப் போன்று முஸ்லிம்களும் கரையோர மாவட்டக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என யதார்த்ததை மறந்து இனவாதிகளினால் கூறப்படுவது தவறான வியாக்கியானமாக அமையும் என்றார்.
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025