2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

பெருநாளை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை முற்கூட்டியே வழங்கவும்

Princiya Dixci   / 2015 ஜூலை 08 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அரச ஊழியர்களின் ஜூலை மாத சம்பளத்தை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு உரிய அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளதாக இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.பி.கமால்தீன், நேற்று செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்களின் ரமழான் பெருநாளை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களின் ஜூலை மாத சம்பளத்தை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
 
எமது ஆசிரியர் சங்கம், நேற்று சிறிகொத்தாவில் நிதி அமைச்சரை சந்தித்து இது தொடர்பில் பேசியுள்ளதாகவும் இதற்காக உரிய அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்ததாகவும் சங்கத்தின் தலைவர் ஏ.பி.கமால்தீன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X