Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 08 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திகாமடுல்ல மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) நண்பகல் வரை 05 சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன், ஒரு அரசியல் கட்சியும் ஒரு சுயேச்சைக் குழுவும் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்துள்ளதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரட்ன தெரிவித்தார்.
காரைதீவினைச் சேர்ந்த இராசையா செல்லையா தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் அம்பாறையைச் சேர்ந்த எல்.எம். பிரேமசிங்க தலைமையிலான சுயேச்சைக்குழுவும் நேற்று மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைமை வேட்பாளர் இராசையா செல்லையா, அம்பாறை மாவட்டச் செயலாளரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான துசித பீ. வணிகசிங்க முன்னிலையில் மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இவ்வேட்புமனு பட்டியலில் இராசையா செல்லையா, கில்பட் பாஸ்கரன், பிறைன் அவுஸ்கோன், சிவகுரு சிவரஞ்சனி, கணபதிப்பிள்ளை யோகராசா, நடராசா சுதர்சன், வடிவேல் யகனாநாயகம், முத்துலிங்கம் கிரிகரன், முருகேசு வரதராசா மற்றும் இராசையா வாசினி உட்பட 10 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இம்மாவட்த்தில் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 4 இலட்சத்து 65ஆயிரத்து 757 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
அத்தோடு, அரசியற் கட்சிகளிலிருந்தும் சுயேச்சைக்குழுக்களிலிருந்தும் 10 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும். சுயேட்சைக்குழுக்கள் 20 ஆயிரம் ரூபாய் கட்டுப்பணம் செலுத்தல் வேண்டும்.
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025