Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 08 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலிடம் வினவிய போது, 'சம்மாந்துறை மண் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு தன்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தென் கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், நேற்று செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்குமாறு சம்மாந்துறை பிரதேச பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சமூகத்துக்கும் தேசிய ரீதியிலும் நன்மை பயக்கக் கூடிய எந்த கட்சி என்றாலும் தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நான்கு கட்சிகளில் தன்னை இணையுமாறும் தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தன. எவ்வாறாயினும். இது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சம்மாந்துறையினைச் சேர்;ந்த கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் கடந்த ஆறு வருடங்களாக தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக கடமையாற்றி பாரிய அபிவிருத்திகளை பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டிருந்தார்.
முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025