2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி

Princiya Dixci   / 2015 ஜூலை 08 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 21 குடும்பங்களுக்கு ஹன்டிகப் இன்ரநெஷனல் நிறுவனத்தினால் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்றது.

ஹன்டிகப் இன்ரநெஷனல் நிறுவனத்தின் முகாமையாளர் ஏ.ஜீ.கலீலுல்ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் அதிதியாக கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் தொகையை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஹன்டிகப் இன்ரநெஷனல் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் எஸ்.செல்வா, பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான பி.எம்.தாஜ்மல், சாந்தினி துஸ்யந்தன், கிராம சேவை உத்தியோகஸ்தர்களான பீ.ரி.ஐயூப், எம்.ரீ.பாயிஸ் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான செயலகத்தின் அனுசரணையில் பாதிக்கப்பட்ட மக்களை மீளக்கட்டியெழுப்பும் செயற்திட்டத்தின் கீழ் இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் முதற்கட்டமாக தலா 4,800 ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X