2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

முறையான பீடைநாசினிகளை பயன்படுத்துவது தொடர்பில் செயலமர்வு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 08 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் விநாயகபுரம் விவசாயிகளுக்கான முறையான பீடைநாசினிகளை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, விநாயகபுரம் -04 கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் இடம்பெற்றுள்ளது.

தம்பிலுவில் விவசாய போதனாசிரியர் திருமதி தர்சினி ரவிச்சந்திரன் தலைமையில் இச்செயலமர்வு நடைபெற்றது.
பயனாளிகளும் நஞ்சற்ற விவசாய உற்பத்திகளை நுகர்வதன் ஊடாக நோயற்ற வாழ்வை  ஏற்படுத்த முடியும் எனும் அடிப்படையில்  இந்த  விழிப்புணர்வு செயலமர்வு நடத்தப்பட்டுள்ளது.

இச்செயலமர்வில் அம்பாறை பிரதி விவசாய பணிப்பாளர் டி.எம்.எஸ்.வி.திஸாநாயக்க, பாடவிதான உத்தியோகத்தர் ஏ.எச்.பி.பிரியந்த ராஜகருணா, பயிர் பாதுகாப்பு லாகுகல வலய உதவி விவசாய பணிப்பாளர் எம்.ஜ.இஸ்மாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X