2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டி சாரதியை தாக்கிய சந்தேக நபர் கைது

Princiya Dixci   / 2015 ஜூலை 09 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார் 

கைகலப்புடன் சம்மந்தப்பட்டு தேடப்பட்டுவந்த நபரை நேற்று புதன்கிழமை (08) கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 
 
முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்ட நபரே இவ்வாறு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
 
கடந்த ஜுன் மாதம் 26ஆம் திகதி அக்கரைப்பற்று முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வைத்து அக்கரைப்பற்று 8/3 பிரிவைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியை தீவுக்காலை கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தாக்கி காயப்படுத்தினார். 
 
சம்பவத்தில் காயமுற்ற முச்சக்கரவண்டி சாரதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்கியவர் தலைமறைவாகியிருந்தார். இந்நிலையிலேயே குறித்த நபர், நேற்று இரவு 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X