Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 09 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அட்டாளைச்சேனை பொது நூலக வாசலில் இயங்கி வரும் மீன்சந்தையின் துர்நாற்றத்தின் காரணமாக வாசகர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை பொதுச் சந்தை சதுக்கத்தின் பொது நூலக வாசலிலேயே மீன் விற்பனை சந்தையும் ஏனைய மரக்கறி மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையும் நெடுங்காலமாக இடம்பெற்று வருகின்றது.
இதனால் அங்கு துர்நாற்றமும் பல சுகாதார சீர்கேடுகளும் இடம்பெற்று வருவதாக மக்கள் பல முறை முறைப்பாடு தெரிவித்தும் பலன் கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கலாசார நிலையம், பொது நூலகம் மற்றும் ஜூம்ஆ பள்ளி வாசல் என பல முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரதேசத்தில்; மீன்சந்தை மற்றும் கழிவுப் பொருட்கள் போடப்பட்டு வருவதனால் சுகாதார அச்சுறுத்தலுக்கும் மக்கள் உள்ளாகின்றனர்.
இவ்வாறு மிகமுக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் வணக்க வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள இப்பிரதேசத்தின் மத்தியிலுள்ள மீன்சந்தையை அகற்றி வேறு இடத்துக்கு மாற்றுமாறு மக்கள் விடுத்து வந்துள்ள கோரிக்கைக்கு பிரதேச சபை மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எந்தவித நடவடிக்கைனையும் மேற்கொள்ளவில்லை.
இதேவேளை, நீர்வடிந்து செல்ல முடியாத வடிகாண்களில் மீன்களின் கழிவுகள் மற்றும் அங்கு விற்பனை செய்யப்படும் மரக்கறிவகைகள், அழுகிய பழங்கள் வடிகான்களில் வீசப்பட்டு வருவதனால் அங்கு சென்றுவரும் மக்கள் மட்டுமல்லாது பிரதான வீதியூடாக செல்லும் பயணிகளும் பெரும் சிரமங்களுக்கும் சகாதார அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகின்றனர்.
எனவே, இவ்விடயத்தில் சுகாதார அசை;சு, உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் பிராந்திய சகாதார பணிப்பாளர் ஆகியேர் உடன் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுப்பதுடன் பொதுமக்ளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துமாறும் கேட்டுநிற்கின்றனர்.
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025