2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சிறுபோக நெல் அறுவடைப் பணிகள் ஆரம்பம்

Princiya Dixci   / 2015 ஜூலை 09 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அறுவடைப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இம்முறை நெல் உற்பத்திக்கு சாதகமாக உஷ்ண காலநிலை நிலவிவருவதனால் விவசாயிகள் சிறந்த விளைச்சலைப் பெற்று வருகின்றனர். 

இருந்த போதிலும், நெல்லுக்கான திடீர் விலை வீழ்ச்சியின் காரணமாக விவசாயிகள் அதன் மூலம் உச்ச பயனை அடைய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அரசின் உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் இன்னும் ஆரம்பிக்கப்படாததனால், தனியார் வியாபாரிகள், அரிசி ஆலைகளின் சொந்தக்காரர்கள் மிகக் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து வருகின்றனர். 

அரசாங்கம் கிலோகிராம் ஒன்றுக்கு 45 ரூபாய் உத்தரவாத விலையினை நிர்ணயம் செய்துள்ள பொதிலும் தற்போது தனியாருக்கும் ஆலை உரிமையாளர்களுக்கும் 28 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X