2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

இஸ்லாமிய அரசாங்க ஊழியர்களின சம்பளத்தை முற்கூட்டி வழங்குமாறு சுற்றுநிரூபம்

Princiya Dixci   / 2015 ஜூலை 09 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

இம்மாதம் 18ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ரமழான் பண்டிகையை முன்னிட்டு, கோரிக்கை முன்வைக்கும் இஸ்லாமிய அரசாங்க ஊழியர்களின் 2015 ஜூலை மாத சம்பளத்தை முற்கூட்டி வழங்குமாறு திறைசேரி செயற்பாடுகள் பணிப்பாளர் நாயகம் ஒப்பமிட்டு 4ஃ2015 சுற்றுநிரூபத்தை வெளியிட்டுள்ளார்.

இச்சுற்றுநிரூபம் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் மாகாண சபை செயலாளர்களுக்கும் திணைக்கள தலைவர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும், இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இக்கொடுப்பனவை இம்மாதம் 17ஆம் திகதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அச்சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X