Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 09 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
சம்மாந்துறைப் பிரதேசத்தின் வீரமுனையிலுள்ள கோவில் மற்றும் பொது அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கும் சம்மாந்துறை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்குமிடையிலான பரஸ்பர நல்லிணக்க சந்திப்பும் இப்தார் நிகழ்வும் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலி நேற்று புதன்கிழமை (08) நடைபெற்றது.
மௌலவி யூ.எல்.சலாஹூதீன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா, உலமா சபையின் பிரதித் தலைவர் மௌலவி யூ.எல்.மஹ்றூப், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி மஜீட் ஐ.பீ, வீரமுனை பிள்ளையார் ஆலய செயலாளர் கிராம சேவை உத்தியோகஸ்தர் கே.ரவி, கண்ணகி அம்மன் ஆலய தலைவர் பீ.பரமதயாளன், மாணிக்கபிள்ளையார் ஆலய நிர்வாகிகள், கிராம உத்தியோகஸ்தர்கள், கோவில் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பள்ளிவாசல் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
சம்மாந்துறைப் பிரதேசத்தின் எல்லைப்; பதிதியில் அமைந்துள்ள வீரமுனை பிரதேசமும் அதனை அண்டிய வகையில் நூர் பள்ளிவாசல் பிரதேசமும் காணப்படுகின்றன. இப்பிரதேசங்களில் பலதரப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துக் காணப்படுவதாக மக்கள் தெரித்துவருகின்றனர்.
நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக ஒன்றித்து ஒற்றுமையுடன் ஒன்றித்து வாழ்ந்த எம்மிடத்தில் ஒருசிலரின் நடவடிக்கைகளினால் மனக்கசப்புக்கள் ஏற்பட்டிருந்தன. மீண்டும் எம்மிடையே பிரிவினைகளை ஏற்படுத்தாது, எமது பாரம்பரியங்களுடன் புரிந்துணர்வை எமக்குள் நிலைநாட்ட வேண்டும்.
இதனைக்கருத்திற்கொண்டு நாம் இருசாராரும் தீய செயல்களில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்த பொலிஸ் அதிகாரிகளுடனான உதவிகளுடன் சில கட்டுப்பாடுகளையும் நடைமுறைகளையும் ஏற்றபடுத்த வேண்டும். இது எமது சமூக உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது பாதுகாக்க வாழிவகுக்கும் எனவும் பிரஸ்தாபிக்கப்பட்டு, அதனை அமூல்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்க உறுதி மொழிகள் இரு தரப்பினர்களாலும் முன்மொழியப்பட்டன.
7 hours ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 Oct 2025