2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சமய விழுமியங்களை கடைப்பிடிக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 ஜூலை 10 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

கதிர்காம பாத யாத்திரிகர்கள் சமய ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் இவ்வேண்டுகோளை பக்தர்களிடம் வினயமாக விடுப்பதாக தெரிவித்தார்.

யாத்திரையில் கலந்துகொள்கின்றவர்கள் பொருத்தமான ஆடைகளை அணிந்துசெல்வதுடன், இறைநாமத்தை மனதில் நிறுத்தவேண்டும்.   பக்தியுடன் யாத்திரையில் பங்கேற்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

கதிர்காம காட்டுவழிப்பாதை பாதயாத்திரை நேற்று உகந்தை மலை கோவிலிலிருந்து ஆரம்பமாகியது.  இதில் 1,800 இற்கும் மேற்பட்டவர்கள் முதல் நாள் யாத்திரையில் இணைந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X