Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 10 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையமும் அக்கரைப்பற்று சொன்ட் நிறுவனமும் இணைந்து அம்பாறை மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் அரங்கமொன்றை நிறுவி சூழலை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் அக்கரைப்பற்று சொன்ட் அலுவலக கேட்போர் கூட மண்டபத்தில நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட இணையத்தின் தலைவர் வ.பரமசிங்கம் தலைமையில்;; நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது, அமுல்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அடுத்த கட்ட செயற்பாட்டுத் திட்டமிடல் செயன்முறையும் விபரிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் சார் பிரச்சினைகளை 07 வகையாக வகுத்து அவற்றை பொருத்தமான அரச, அரசசார்பற்ற அமைப்புக்கள் பொறுப்பேற்பது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.நஜீப் வழிநடத்;தலில் நடைபெற்ற கலந்துரையாடலில் அக்கரைப்பற்று சொன்ட் அமைப்பின் பணிப்பாளர் ச.செந்தூராசா, அக்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளர் ஏ.ஜே.எம்.அஸ்மி, அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மாயில்;, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பொதுச்சுகாதார பரிசோதகர்கள், உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அதிகாரி, காலநிலை மாற்றத்தினை மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ளும் வகையில் உள்வாங்கப்பட்ட வளவாளர் எஸ்.ரமேஸ்வரன்;, சொன்ட் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ.விஜயகுமார் அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், அரச கால்நடை வைத்திய அதிகாரி உட்பட அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்கள்.
7 hours ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 Oct 2025