Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 10 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்மால் இனங்காணப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனை அம்பாறைக் கரையோரப் பிரதேசங்களின் வேட்பாளர்களில் ஒருவராக முன்மொழியுமாறு நிந்தவூரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பொது அமைப்புக்கள் கட்சித்தலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நிந்தவூரை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் கூட்டாக இன்று வெள்ளிக்கிழமை (10) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த இரண்டு நாடாளுமன்ற பதவிக்காலங்களை எமது கிராமம் சார்பாகவும் கட்சி சார்பாகவும் வகித்து வந்தவர், தம் மக்களது பெறுமதியான வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட பொறுப்பு வாய்ந்த பதவியினை வகித்து வருகிறோம் என்ற அடிப்படையில் போதியளவு வெளிப்படைத்தன்மையாகவும் பெறுப்புக் கூறத்தக்க வகையிலும் வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலும் செயற்படத் தவறியமையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாரிய அதிருப்தியின் விளைவாகவே நாம் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளோம்.
அதன்படி, கடந்த காலங்களில் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் மக்களினதும் சமூகத்தினதும் நலன் சார் விடயங்களில் போதியளவு அக்கறை காட்டாததனால் எமது மக்கள் மற்றும் சமூகம் எதிர்நோக்கிய சவால்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்குரிய தெரிவுகள் மூலமாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என நாம் இதன் மூலம் எதிர்பார்க்கின்றோம்.
7 hours ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 Oct 2025