Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 10 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால்காசிமின் சொந்த நிதியொதுக்கீட்டின் மூலம் 13 விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நேற்று வியாழக்கிழமை (09) வழங்கி வைக்கப்பட்டன.
நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒருங்கிணைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம்.இப்றாஹீம் தலைமையில் நிந்தவூர் அல்- மஸ்ஹர் வித்தியாலத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால்காசிம் மற்றும் விளையாட்டு உத்தியோகஸ்தர் எஸ்.எல்.தாஜூதீன் உள்ளிட்ட அதிதிகள் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இவ்வைபவத்தில் தேசிய ரீதியில் இடம்பெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்ற சாதனை வீரர்கள் அதிதிகளினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
4 hours ago