Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 11 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.ஏ.ஸிறாஜ்
இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடவுள்ள 05 வேட்பாளர்களில் ஒருவராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உள்ளார்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் தெரிவான 04 உறுப்பினர்களில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அதிகூடுதலான வாக்குகளைப் பெற்று முதன்மை இடத்திற்கு தெரிவாகியிருந்தார்.
இம்முறை நடபெறவுள்ள பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், போட்டியிடும் பட்சத்தில் அதிகூடுதலான வாக்குகளைப் பெறுவார் என்று எல்லோராலும் பரவலாக நம்பப்படுகின்றது.
ஏ.எல்.தவம் அக்கரைப்பற்று சார்பாக போட்டியிடுவது முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
4 hours ago