Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 11 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாம் பதிநான்கு மணித்தியாலங்கள் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுப்போடும் புனித நோன்பினை நோற்க்கும் உயர்ந்த பணியைப் போன்று மக்களுக்கு சேவை செய்யும் விடயங்களிலும் எம்மை அர்ப்பணிக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி வணிகசிங்க தெரிவித்தார்.
இன உறவை வலியுறுத்தி கல்முனை பிரதேச செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டும் இப்தார் நிகழ்வும் விஷேட மார்க்கச் சொற்பொழிவும் வியாழக்கிழமை மாலை (09) கல்முனை இருதைய நாதர் மண்டபத்தில் நடைபெற்றது.
அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
முஸ்லிம்களின் புனித நோன்பில் உள்ளடங்கியுள்ள அனைத்தும் இறைவனுடன் தொடர்பானவையாக காணப்படுகின்றன. இவ் இப்தார் போன்ற நிகழ்வுகள் மூலம் ஏனைய சமூகங்கள் முஸ்லிம்களின் கலாசார விழிமியங்களை அறியமுடிகின்றது.
இப் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், இப் பிரதேச மக்களும் மிகவும் நற்பண்புகள் உடையவர்கள் என இப்பிரதேச செயலாளருக்கு முன்பு இங்கு கடமையாற்றிய பிரதேச செயலாளரான மங்கள விக்கிரமாராச்சி என்னிடம் கூறியுள்ளார்.
அலுவலக உத்தியோகத்தர்களாகிய நாம் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து இவ்வாறு கலாசார நிகழ்வினை நடத்துவதனால,; குறித்த சமூகத்தின் கலாசாரத்தை ஏனைய இனத்தவர்கள் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமும் இதன்னூடக ஏற்படுகின்றது எனக் கூறினார்.
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விஷேட அதிதிகளாக அம்பாறை மேலதிக மாவட்டச் செயலாளர் அஷ்செய்க் எம்.ஐ.அமீர், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபள்யூ, அப்துல் ஹபார், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்நஸீர், ஆகியோர்கள் உட்பட பிரதேச செயலாளர்கள், நிறுவனத்தலைவர்கள், ஊடகவியலார்கள் மற்றும் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
7 hours ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 Oct 2025