Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 17 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு, கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (16) நடைபெற்றது.
பாடசாலை மட்டத்திலும் மாணவர்கள் தாம் வாழும் சமூகத்திலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ளுதல், அவர்களது உரிமைகள் தொடர்பில் அறிவூட்டல், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் வழிமுறைகள் தொடர்பில் தெளிவூட்டல், அவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பில் நெறிப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் பிரதேச செயலாளரால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் ஏ.சசீந்திரன், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நிசாந்தினி வசந்த ரூபன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் யசோதா கபிலன் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சிபாயா றமீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago