2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

19 வயதான மாணவியின் சடலம் மீட்பு

Thipaan   / 2015 ஜூலை 18 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை, கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள நீலாவணையில் 19 வயதான மாணவியொருவரின் சடலம், சனிக்கிழமை(18) மீட்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரம் கற்கும் 19 வயதான மாணவியொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீலாவணையிலுள்ள அவரது உறவினர் வீட்டிலிருந்து குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சடலம் தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X