Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
George / 2015 ஜூலை 18 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் 'அட்டாளைச்சேனை தாயின் தாலாட்டில் சிகரம் தொட்ட சிகரங்கள் மகிழ்ச்சி விழா' எனும் தொனிப் பொருளில் அட்டாளைச்சேனை மண்ணில் பிறந்து உயர் பதவியிலுள்ளவர்களை பாராட்டி கௌரவிக்கும நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் தவிசாளரும் அகில இலங்கை சமாதான நீதவானாகிய எம்.எல்.முஹம்மட் றியாஸ் தெரிவித்தார்.
வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.பி.நூறுல் ஹக் தலைமையில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அஸர் தொழுகையின் பின்னர் அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாயலில் விஷேட துஆப் பிரார்த்தனை நடாத்தப்பட்ட பின்னர் கௌரவிக்கப்படுகின்ற அட்டாளைச்சேனை தாயின் தாலாட்டில் சிகரம் தொட்ட சிகரங்கள் 120 பேர்களும் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து இசை வாத்திய குழுவினரால் பிரதான வீதி வழியாக அழைக்கப்பட்டு அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானம் வரை செல்லவுள்ளதாகவும் சங்கத்தின் தவிசாளரும் அகில இலங்கை சமாதான நீதவானாகிய எம்.எல்.முஹம்மட் றியாஸ் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
8 hours ago
24 Jun 2025