Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 19 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் களியோடை ஆற்றில், நேற்று (18) மீட்க்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்க்கப்பட்டவர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று 7/4 பிரிவைச் சேர்ந்த 34 வயதுடைய மகேஸ்வரன் சதீஸ்குமார் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை மாலை சந்தைக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பவில்லை என நேற்றைய தினம்(18) பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு குறித்தநபரின் தாயார் சென்றுள்ளார்.
இதன்போதே, மீட்க்கப்பட்ட சடலம் தொடர்பிலான தகவலை பொலிஸார் தெரிவித்ததையடுத்து, உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸார், மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago