2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்; நால்வர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 19 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த சிலர், கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில்  நான்கு சந்தேக நபர்களை சனிக்கிழமை (18) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை வீதியில் தலைக்கவசம் இல்லாது மோட்டார் சைக்கிளில் பயணித்த சிலரை மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர் அவதானித்து அவர்களை வழிமறித்து,  தலைக்கவசம் அணியாமை தொடர்பில்   விசாரித்துள்ளார். இதன்போது அங்கு கூடிய சிலர், மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பலமான உட்காயங்களுக்குள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X