Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 20 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளூர்ப் பொறிமுறையில் தீர்க்கப்படுமென்பதில் நம்பிக்கை இல்லை. அது சர்வதேச பொறிமுறையில் தீர்க்கப்பட வேண்டுமென்பதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் இருக்கின்றார்கள் என்று கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
துறைநீலாவணையில் சனிக்கிழமை (18) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், '2009ஆம் ஆண்டு மே மாதம் வட, கிழக்கில் யுத்தம் மௌனித்த பின்னர் இந்நாட்டில் அரச பயங்கரவாதம் புரையோடிக் காணப்பட்டது. இதை எவராலும் மறக்கமுடியாது.
2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. மனம் நொந்து போயிருந்த தமிழ் மக்கள், இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிரூபித்தார்கள்.
இதன் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் தமிழர்களின் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பது கூட்டமைப்பின் ஆக்கபூர்வமான முன்னெடுப்பென்பதை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தியும், அதனை ஏற்காத மஹிந்த அரசாங்கம் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டது.
இந்தப் பொறிமுறையை அரசாங்கம் சரியானமுறையில் நடைமுறைப்படுத்தி தீர்வை வழங்காதென்பதை அறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வதேசத்தின் மத்தியில் எம்முடைய பிரச்சினைக்கு தீர்வு காண எடுத்துச்சென்றது' என்றார்
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago