Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 20 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.எம்.சி.அன்சார்
நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் அந்த மாற்றத்தினை முஸ்லிம் மக்களால் முழுமையாக சுவைக்க முடியவில்லை. குறுகிய அரசியல் வட்டத்துக்குள் கட்டண்டு மீள முடியாமல் தவிக்கின்றனர். அவற்றிலிருந்து சமூகத்தை விடுவிப்பதே எனது முதற்பணியாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல வேட்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
'ஜனவரி 08ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் மாற்றமானது எமது சமூகத்தை வந்தடையவில்லை என்பதுதான் கவலையான விடயமாகும். அந்த மாற்றத்துக்கு சம்மாந்துறை மண்ணில் இருந்து தலைமை கொடுப்பதே எனது முதற்பணியாகும்.
அதுபோன்று அம்பாறை மாவட்டத்தில் பிரதேசவாதம் என்பது தற்போது சில்லறை அரசியல்வாதிகளினால் தளைத்தோங்கி காணப்படுகின்றது. இவற்றுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்பேன்'என்றார்.
'மேலும்,இன, மத, பிரதேச வேறுபாடுகள் இல்லாமல் அரசியல் பயணத்தை தொடருவதே எனது நோக்கமாகும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தினை எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை தரவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago