Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 21 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாந்திபுரம் கிராமத்தில் கடந்த வருடத்திலிருந்து யானைகளின் தொல்லை அதிகரித்துவருவதாகவும் இதனால், மலைகளின் உச்சிகளில் கூடாரங்கள் மற்றும் கொட்டில்களை அமைத்து இரவுவேளைகளில் தாங்கள் அங்கு தங்குவதாகவும்; அக்கிராமவாசிகள் தெரிவித்தனர்.
1975ஆம் ஆண்டு சாந்;திபுரம் கிராமம் உருவாக்கப்பட்டதிலிருந்து 72 குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. இந்நிலையில், யானைகளின் தொல்லைக்கு பயந்து பல குடும்பங்கள் இக்கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளன. தற்போது தங்களின் ஜீவனோபாயத் தொழில் நிமித்தம் 24 குடும்பங்கள் மாத்திரமே இக்கிராமத்தில் வாழ்ந்துவருகின்றன.
இக்கிராமத்தினுள் நுழையும் யானைகள், உணவுப்பொருட்கள் மற்றும் உடைமைகள், வீடுகளை சேதப்படுத்திவருகின்றன. எனவே, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி இதற்கான தீர்வை விரைவில் உரிய அதிகாரிகள் பெற்றுத்தர வேண்டுமென்றும் இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜி.ஜெகதீசன் கேட்டபோது, 'யானைகளின் தொல்லையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் யானைகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பதற்காக மின்சாரவேலி அமைக்கும் திட்டமும் மின்சாரம் வழங்கும் திட்டமும் கடந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது' எனவும் தெரிவித்தார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago