2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

புகைத்தலால் நாளாந்தம் சுமார் 80 பேர் மரணிக்கின்றனர்.

Suganthini Ratnam   / 2015 ஜூலை 23 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

நாட்டில் புகைத்தலால் நாளாந்தம் சுமார் 80 பேர் மரணிப்பதாக  அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

தேசிய போதையொழிப்பு மாதத்தை முன்னிட்டு புகைத்தல் ஒரு தற்கொலை முயற்சி எனும் தொனிப்பொருளில் செவ்வாய்க்கிழமை  (21) அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'போதைப் பொருள் பாவனையானது எம்மை தீய செயல்களுக்கு இட்டுச் செல்வதுடன் சமூகத்தில் நன்மதிப்பையும் இழக்கச் செய்யும். தற்போதைய சூழலில் எமது பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.இதனால் பலர் சிறுபராயத்திலேயே இதற்கு அடிமைகளாகி விடுகின்றார்கள்' என்றார்.

'மேலும்,புகைபிடிப்பவர்கள் அந்தப்பழக்கத்திலிருந்து விடுபடுவதென்பது இலகுவான காரியமல்ல. புகையிலையில் அடங்கியுள்ள 'நிக்கெட்டின்' எனும் இரசாயனப் பதார்த்தம் பல தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.உலகில் ஒரு வருடத்துக்கு சுமார் 10 இலட்சம் பேர் புகைப்பிடிப்பதால் மரணிக்கின்றனர்.இவ்வாறான தீய செயல்களிலிருந்து தவிர்ந்து சமூகத்தில் நற்பிரஜைகளாக மிளிர வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X