2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

ஒன்றிணைந்து செயற்படுவோம்: தயா

Suganthini Ratnam   / 2015 ஜூலை 30 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.பைஷல் இஸ்மாயில்

கட்சி, நிறம், சமய பேதங்களை மறந்து எமது கிராமத்தை முன்னெற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான தயா கமகே தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவு கடற்கரையோரம் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 60 மாத திட்ட சிந்தனையில் 10 இலட்சம் தொழில் வாய்ப்பு மற்றும் முதலீட்டு வலய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மிகக் கூடுதலான நன்மைகளை திகாமடுல்ல மாவட்டத்துக்கு கொண்டுவரவும், அம்பாறை மாவட்டத்தை இலங்கையின் இரண்டாவது பொருளாதார வலயமாக மாற்றியமைக்கவும் வாக்குறுதியளிக்கின்றேன்' என்றார்.

அத்துடன், 'எமது அம்பாறை மாவட்டத்துக்கு 1 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக்கொடுக்கவும் உறுதியளிக்கின்றேன்.

திட்டமிடப்பட்ட வினைத்திறன்மிக்க ஒரு வீதி அபிவிருத்தி முறைமையை எமது மாவட்டத்துக்கு கொண்டு வருவதுடன் மட்டக்களப்பு வரையுள்ள புகையிரத  பாதையை கரையோர பிரதேச வழியூடாக பொத்துவில் வரை கொண்டு செல்ல சகல நடவடிக்கைகளையும் எடுத்து பொத்துவிலில் இருந்து அம்பாறை, மகஒயா, தெஹியத்த கண்டிய ஊடாக பொலன்னறுவை மட்டக்களப்பு புகையிரத பாதையுடன் இணைக்க சகல திட்டங்களையும் முன்னெடுத்துள்ளேன்.

இந்த அபிவிருத்தி திட்டங்கள் யாவும் நிதர்சனமாகக் காண்பதற்கு எதிர்வரும் ஒக்கஸ்ட் மாதம் 17 ஆம் திகதி எமது வெற்றியை பலப்படுத்திச் செல்ல அதற்கான ஆதரவைத் தருமாறு வேண்டுகின்றேன்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X