2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

இரண்டாவது பொருளாதார வலயமாக அம்பாறை மாவட்டத்தை மாற்றவுள்ளேன்: தயா

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்டத்தை இலங்கையின் இரண்டாவது பொருளாதார வலயமாக மாற்றி அமைப்பதற்கு வாக்குறுதி அளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளருமான தயா கமகே தெரிவித்தார்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதுடன், பெண்களுக்கான சிறு கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவித்து அதன் ஊடாக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அட்டளைச்சேனையில் செவ்வாய்க்கிழமை (04) இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாட்டில் நல்லாட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில், பொதுத் தேர்தலை நாம்  எதிர்நோக்கியுள்ளோம். கட்சி, நிறம், மத பேதங்களை மறந்து எமது கிராமத்தை முன்னேற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்' என்றார்.

 'அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகளை தீர்த்துவைக்கவுள்ளதுடன், வீடுகள் அற்றுள்ளவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளளேன்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X