Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாணத்தை ஆசியாவின் அதிசயமான மாகாணமாக மாற்றிக் காட்டுவதுடன், இதற்காக இளைஞர்கள் அனைவரும் தன்னுடன் கைகோர்ப்பதற்கு முன்வர வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மாநாடு, சம்மாந்துறை விழினியடியில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போது இந்த நாட்டில் நாம் தொழில் பெறுநர்களாக இருப்பதை விட, அதிகளவானோருக்கு தொழில் வழங்குநர்களாக மாற வேண்டும். எங்களால் அனைத்தும் முடியும் என்ற தைரியமும் உற்சாகமும் ஒவ்வொரு இளைஞர்களின் மனதிலும் ஏற்பட வேண்டும்' என்றார்.
'நல்லதொரு சமூகம் உருவாக வேண்டும் என்றால், இன்றைய இளைஞர்களின் வகிபாகம் கட்டாயத் தேவையாக உள்ளது. அத்துடன், இளைஞர்களின் ஆக்கமும் ஊக்கமும் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு கட்டாயத் தேவையாக உள்ளது. நாட்டையும் எமது ஊரையும் எமது குடும்பத்தையும் நல்ல நிலைக்கு கொண்டுவருவதற்கு இன்றைய இளைஞர்கள் நல்ல சிந்தனையுடன் தங்களின் வேலைப்பாடுகள், நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
'கிழக்கிலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றங்களின் கீழ் பல தொழிற்பேட்டைகளை உருவாக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இவற்றின் மூலம் வேலை இன்றியுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும். மேலும், எமது ஊர்களிலிருந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக எமது குடும்பப் பெண்கள், எமது சகோதரிகளை அனுப்புவதை விடுத்து, அவர்களை தங்களின் வீடுகளிலிருந்தவாறே சிறந்த முறையில் கைத்தொழில்களையோ அல்லது அவர்களால் முடிந்த தொழில்களையோ செய்வதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் நடவடிக்கையை மாகாணசபை மூலம் செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்'எனவும் அவர் கூறினார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago