2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனை விவசாயிகளிடம் 75 ஆயிரம் கிலோகிராம் நெல் கொள்வனவு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனை விவசாயிகளிடமிருந்து அரசாங்க உத்தரவாத விலைக்கு சிறுபோக நெல் கொள்வனவு கடந்த ஐந்தாம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் 75 ஆயிரம் கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபையின் அட்டாளைச்சேனை நெல் களஞ்சியசாலையின் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.லியனகே நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஒரு கிலோ சம்பா 50 ரூபாய் படியும் ஒரு கிலோகிராம் நாடு  45 ரூபாய் படியும் அரசாங்க உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யப்படுவதுடன், விவசாயி ஒருவரிடமிருந்து இரண்டாயிரம் கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X