Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
திகாமடுல்ல மாவட்டத்தில் எனக்கு அளிக்கப்படும் வாக்குகள் தயாகமகேயை அல்லது வேறு சிங்கள ஒருவரை எம்.பி.யாக்குவதற்கு வழிவகுக்கும் என்று முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மேடைகளில் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது மக்களை முட்டாளாக்கும் செயலாகும். அப்படியென்றால், கண்டியில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அங்குள்ள சிங்களவர் ஒருவரை எம்.பி.யாக்காதா? என்று வேட்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை கேள்வி எழுப்பினார்.
அட்டாளசேனையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
சிங்கள அரசியல்வாதிகள் ஓரவஞ்சனை காட்டுவதாக கூறுவோர், முஸ்லிமாகிய நான் வெற்றி பெறுவதைக் கூட விரும்புகின்றார்களில்லை.
வீடுவீடாக சென்றபோதுதான் ஒவ்வொரு குடும்பத்திலும் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இந்நிலையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தால் அவற்றுக்கெல்லாம் தீர்வு காணமுடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். நான் எனக்கு மட்டுமே வாக்களிக்கச் சொல்லி கேட்கவில்லை. மாறாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் தங்களுடைய விருப்பு வாக்குகளில் ஒன்றை எனக்கு தர வேண்டுமென்றே கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago