Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
நாடாளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அந்தந்த பிரதேசத்துக்கு தகுதியான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள்தான் நீதிபதிகள் என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம்.அத்தாவுல்லா தெரிவித்தார்.
சாய்ந்தமருது கடற்கரை வீதியில் உள்ள பௌசி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாங்கள் செயற்பட்டதெல்லாம் நமது எதிர்கால சந்ததிகளின் நிம்;மதியான வாழ்வுக்குத்தான். கடந்த 30வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டை ஆட்டிப்படைத்த கொடிய பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு உத்தரவாதத்தைப் பெற்று, அது இல்லாதொழிக்கப்பட்டது. அதனூடாக கடந்தகாலங்களில் நாங்கள் அச்சத்துடன் பயணித்த நிலை முடிவுக்குக்கொண்டு வரப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து கிழக்கைப் பிரித்ததன் ஊடாக முதலமைச்சர்களாகவும் அமைச்சர்களாகவும் எங்களை நாங்களே ஆளும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரை பெறுவதற்கான நாங்கள சிறந்த வியூகத்தை வகுத்துள்ளோம். அதனூடாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரை பெற்று, மறைந்த தலைவர் காட்டிய வழியில் நமது பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வோம் என்றார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago