2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

யானை தாக்கி விவசாயி மரணம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள மாதுஓயாப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை காட்டு யானை  தாக்கியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்ததாக பதியதலாவ பொலிஸார் தெரவித்தனர்.

பதியதலாவையைச் சேர்ந்த ஆர்.எம்.கே.பண்டார (வயது 60) என்ற  விவசாயியே காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார்.

விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இவரை, காட்டினிலிருந்து வந்த  யானை தாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X