2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

நினைவுப்படிகத்தை அகற்றுவது அட்டகாசமல்ல: ஹென்றி மகேந்திரன்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்,​ எஸ்.கார்த்திகேசு

சட்டத்துக்கு முரணான வகையில் தனியொருவரால் தன்னிச்சையாக பொது இடமொன்றில் அமைக்கப்படும் நினைவுப்படிகத்தை அகற்றுவது அட்டகாசமல்ல. அது ஒரு தற்காப்பு காவல் நடவடிக்கையாகும் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.

கல்முனை தேர்தல் பணிமனையில் நேற்று வியாழக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு வீதிக்கான பெயர் சூட்டப்படும் போது பல்வேறுபட்ட முன்னேற்பாடுகள் இடம்பெற்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும். இது ஒரு பொதுவான சட்டம். அவ்வாறான சட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்காது தனியொருவரினால் இரவோடிரவாக கபடத்தனமாக வீதிக்கான நினைவுப்படிகத்தை அமைப்பதென்பது சட்டத்துக்கு முரணானது. அவ்வாறானவர்களுக்கெதிராகவே சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

மேலும், கல்முனை நகரப்பிரதேசத்தில் தமிழ் மக்களின் சம்மதமின்றி முஸ்லிம் சகோதர இனத்தின் தலைவர் ஒருவரின் பெயரை சூட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

ஆகவே, ஒரு சமூகத்துக்கெதிராக மேற்கொள்ளப்படும் அநியாயங்களை தட்டிக்கேட்பதென்பது எவ்வாறு அட்டகாசமாக மாற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X