2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைநெறிகள் மற்றும் அரபுமொழி பீடத்தைச் சேர்ந்த இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை மீள ஆரம்பமாகவுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.

விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் புதன்கிழமை  மாலை ஐந்து மணிக்கு முன்பாக அவர்களுக்குரிய விடுதிகளுக்கு சமூகம் அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்லாமிய கற்கைநெறிகள் மற்றும் அரபுபீடத்தைச் சேர்ந்த இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் கடந்த நான்காம் திகதி  சிறு கைகலப்பு ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மறு அறிவித்தல்வரை  இந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. எனவே, இந்த மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X