Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனிபா
அம்பாறை, பாலமுனையில் அமைந்துள்ள அரசினர் ஹோமியோபதி வைத்தியசாலையானது போதியளவான அடிப்படை வசதிகளின்றி காணப்படுவதுடன், நீண்டகாலமாக நிலவும் பௌதீகவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மர்ஹும் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரபின் முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்டு கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இயங்குகின்ற இந்த வைத்தியசாலைக்கு நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, தீகவாபி, திராய்க்கேணி ஆகிய பிரதேசங்களிலிருந்து நாளாந்தம் சுமார் 80 நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்கு வருகின்றனர்.
இந்த வைத்தியசாலையில் ஒரேயொரு பெண் வைத்தியரும் ஊழியர்களும் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றனர்.
மேலும், இந்த வைத்தியசாலையில் சுற்றுமதில், மலசலகூட வசதி, தளபாடங்கள், வைத்தியர் தங்கும் விடுதி ஆகியவை இல்லாமையினால் உத்தியோகஸ்தர்களும் நோயாளர்களும் சிரமத்தை எதிநோக்கி வருகின்றனர். எனவே, கூடிய விரைவில் இந்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து தருவதுடன், தேவையான ஆளணியினரை நியமிக்குமாறும் பொதுமக்கள் கோரியுள்ளனர்;.
இது தொடர்பாக அங்கு கடமையாற்றும் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் நேற்று புதன்கிழமை கேட்டபோது, இங்கு காணப்படும் பௌதீகவளப் பற்றாக்குறை மற்றும் போதிய வைத்தியர் இன்மையால் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகின்றது. இந்த வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நிவர்த்திசெய்து தரவேண்டும்' எனவும் தெரிவித்தார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago