2025 மே 21, புதன்கிழமை

அ.இ.ம.காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு அங்குரார்ப்பணம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கான சாய்ந்தமருது மத்திய குழுவை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இரவு சாய்ந்தமருதில் அமைந்துள்ள கட்சியின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு காரியாலயத்தில் நடைபெற்றது.

கட்சியின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ருப், செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவிலுள்ள 17 குறிச்சிகளுக்கும் ஏற்கனவே நிறுவப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிளைகளை ஒன்றிணைத்து சாய்ந்தமருது பிரதேசத்திற்கான மத்திய குழு அமைக்கப்பட்டது.

அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான ஏ.எல்.எம்.அன்வர் ஹாஜியார், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட்; பதியுதீனால் நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதி அமைச்சர் அமீர் அலி இதன்போது அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது மத்திய குழுவின் தலைமைப் பொறுப்பை அன்வர் ஹாஜியார் ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் மதிய குழுவுக்கான ஏனைய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X