2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 06 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது, அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், தேவைப்பாட்டின் அடிப்படையில்  அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்கு முறையில் மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும்  நடைமுறைப்படுத்தப்படாமலுள்ள வேலைத்திட்டங்கள் ஆராயப்பட்டது.

மேலும், மேற்கொள்ளப்பட வேண்டிய வீதி அபிவிருத்தி, வடிகாலமைப்புச் சீராக்கல், மீனவர் பிரச்சினை, மீனவர்களின் சந்தைப்படுத்தலுக்கான இலகு வழிமுறைகளை ஏற்படுத்தல், சுகாதாரத்துறையை விருத்தி செய்தல், சந்தைக் கட்டட விஸ்தரிப்பு, மீனவர் சந்தை விஸ்தரிப்பு, கல்வித்துறை அபிவிருத்தி, போக்குவரத்து, தபால்சேவை, விளையாட்டுத்துறை, நவீன தொடர்பாடல் சேவை போன்ற விடயங்களை மக்கள் தேவைக்காக துரிதகதியில் விருத்தி செய்வதற்கான தீர்மானம் இதன்போது  எட்டப்பட்டது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X