Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
சூடான லேசர் கதிர் மூலம் நுளம்புகளை அழிக்கும் உபகரணம் ஒன்றை அக்கரைப்பற்று முனவ்வறா ஜூனியர் கல்லூரி மாணவன் என்.ஜாஸிம் அத்னான் கண்டுபிடித்துள்ளார்.
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தினால் நடத்தப்பட்ட புதிய கண்டு பிடிப்பாளர்களுக்கான போட்டியில் அக்கரைப்பற்று வலய முனவ்வறா ஜூனியர் கல்லூரி மாணவன் சூடான லேசர் கதிர் மூலம் நுளம்புகளை அழிக்கும் உபகரணம் ஒன்றை கண்டுபிடித்து வலய மட்டத்தில் 1ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
அம்மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் ஏ.ஜீ.அன்வர் தலைமையில் பாடசாலை கேட்போர்கூட மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி, பாடசாலை வலய பொறுப்பாசிரியர் எம்.எச்.ஹாறுன், எம்.பி.உவைஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .