2025 ஜூலை 05, சனிக்கிழமை

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் சாதனை

Niroshini   / 2015 நவம்பர் 04 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட புகைப்பட  போட்டியில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீன் தெரிவித்தார்.

மூன்றாவது  கண்களினால் உலகை காண்போம் எனும் தலைப்பில் 21 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையிலான புகைப்பட போட்டியில் மொஹமட் நவாஸ் ஷிம்தார் (தரம் 12) என்ற மாணவன் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை,16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையிலான தேசியமட்ட புகைப்பட போட்டியில் என்.சுஆத் அஹ்மத் (தரம்-11) என்ற மாணவன் முதல் பத்துப்பேர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

தேசிய மட்டத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடை பெற்ற இப்போட்டியில் தேசியமட்டத்தில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (06) கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் காலை 8.30 மணிக்கு நடை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .