2025 மே 21, புதன்கிழமை

அக்கரைப்பற்றில் இரு வீடுகளில் கொள்ளை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 11 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் தங்கநகைகள் நேற்று வியாழக்கிழமை இரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பிரதேசத்தில் பழைய தபாற்கந்தோர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் உரிமையாளர் வியாழக்கிழமை இரவு வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றதாகவும் இன்று வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டிருந்தது. அத்துடன்,  வீட்டிலிருந்த பணம் மற்றும் தங்கநகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
அவ்வாறே உடையார் வீதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளரும் வீட்டை பூட்டிவிட்டு சென்றதாகவும் இன்று வெள்ளிக்கிழமை வீட்டுக்கு  வந்தபோது வீட்டின் கூரை  உடைக்கப்பட்டிருந்தது. அத்துடன், அவ்வீட்டிலிருந்து பணமும் தங்கநகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .