Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 22 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, அக்கரைப்பற்று நகரில் தனியான காணிப்பதிவகம் பன்முகப்படுத்தப்படுவது காலத்தின்; தேவையாகும். இதை வலியுறுத்தி எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில்; தனிநபர் பிரேரணையை தான் சமர்ப்பிக்கவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'அம்பாறை மாவட்டத்தின் காணி மற்றும் ஆவணப் பதிவுக்கான காணிப் பதிவகங்கள், கல்முனை நகரிலும் அம்பாறை மாவட்டச் செயலகத்திலும் அமையப்பெற்று அவற்றின் மூலம் மக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன' என்றார்.
'உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கீழ் அமைந்துள்ள கல்முனைக் காணிப் பதிவகத்தின் நிர்வாக எல்லைகள் வடக்கே மருதமுனை, தெற்கே திருக்கோவில், மேற்கே இறக்காமம்வரை வியாபித்துள்ளன. இதனால், மக்களும் சட்டத்தரணிகளும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
மேலும், பொத்துவில் பிரதேசமானது அம்பாறைக் காணிப்பதிவகத்தின் நிர்வாக எல்லையின் கீழ் அமைந்துள்ளமையால் மக்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் அசௌகரியத்தை தோற்றுவித்துள்ளன.
ஆகவே பொத்துவில், கோமாரி, தம்பிலுவில், இறக்காமம், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை போன்ற எல்லைகளைக் கருத்தில் கொண்டு மக்களின் தேவைகளை இலகுபடுத்தும் வகையில்; நீதிமன்றங்கள் அமையப்பெற்றுள்ள அக்கரைப்பற்று நகரில் தனியான காணிப்பதிவகம் பன்முகப்படுத்தப்படுவது காலத்தின் தேவையாகும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago