Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 18 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 17ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாடசாலைகளிலிருந்து 247 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாக அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக முறைசாரா உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.முகம்மட் லாபீர் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
இந்த கல்வி வலயத்தில் அமைந்துள்ள பொத்துவில் கல்விக் கோட்டத்திலிருந்தே அதிகளவு மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனனர். இந்நிலையில், பொத்துவில் கல்விக் கோட்டத்தில் 102 மாணவர்களும் அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தில் 60 மாணவர்களும் அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் 85 மாணவர்களும் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்கள் தொடர்பான விபரம், இடைவிலகுவதற்கான காரணங்கள், இவர்களை மீண்டும் பாடசாலைகளில் இணைத்து பாடசாலைக் கல்வியை தொடர வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதேச செயலாளர்கள், பொலிஸார், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டோரின் உதவி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago