2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்றில் விழிப்புணர்வு நடவடிக்கை

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

“புகைத்தல் மற்றும் மதுபாவனை இல்லா இல்லத்தில் சேமிப்பை நோக்கி” எனும் தொனிப்பொருளில் மக்களை விழிப்பூட்டும் செயற்றிட்டம் அக்கரைப்பற்று தேசிய சேமிப்பு வங்கியினால் நேற்று(31) அக்கரைப்பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.

வங்கி முகாமையாளர் எம்.ஜ.ஏ. ஜவாஹிர் மற்றும் உதவி முகாமையாளர் வி.தயாளன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு செயற்பாட்டில் அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.ஜ.எம்.ஹசீம் உள்ளிட்ட வங்கி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது,போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் வாகனங்களில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .