2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்தோரில் 2,780 பேருக்கு நீரிழிவு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 13 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கடந்த வருடம் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெறவந்த 25,618 நோயாளர்களில் 2,780 பேர் நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளதாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டிலும் 1,789 பேர் நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் இவ்வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்தபோது தெரியவந்துள்ளது. 2014ஆம் ஆண்டை விட கடந்த வருடத்தில் இந்த நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

'ஆரோக்கியத்துடன் வாழ விரும்புகின்றவர்கள் ஆயுர்;வேதத்துடன் இணைக' என்ற கருப்பொருளில்  தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய பொதுமக்களுக்கு வைத்திய ஆலோசனை வழங்கும் கருத்தரங்கு அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்காக சிகிச்சையையும் ஆலோசனையையும் வைத்தியர்கள் வழங்குகின்றனர். இருப்பினும், இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாமலுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X