2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அட்டாளைச்சேனை உப மின்சார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கை மின்சார சபையின் அட்டாளைச்சேனை உப மின்சார நிலையத்தை மின்சார அத்தியட்சகர் காரியாலயமாக தரம் உயர்த்துவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று புதன்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,  'அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி, தீகவாபி, ஆலிம் நகர், ஹிரு கிராமம், ஆலங்குளம், சம்புநகர், சின்னப்பாலமுனை, உதுமாபுரம் ஆகிய கிராமங்களிலுள்ள மக்களின் நலன் கருதி அட்டாளைச்சேனை உப மின்சார நிலையத்தை தரம் உயர்த்துவதற்கு கிழக்கு மாகாண சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்படி கிராமங்களிலுள்ள மக்கள் புதிய மின்னிணைப்பை பெறுவதற்காக கட்டணம் செலுத்துதல், மின்னிணைப்பில் தவறுகள் காணப்படுமாயின் முறைப்பாடு செய்வது உள்ளிட்ட தேவைகளுக்காக நிந்தவூர், கல்முனை போன்ற தூரப் பிரதேசங்களுக்கு செல்லவேண்டியுள்ளது' என்றார்.  

'அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக நான் கடமை புரிந்த வேளையில் மக்களின் நலன் கருதி அட்டாளைச்சேனையில் இலங்கை மின்சார சபையின் உப மின்சார நிலையம் 1995ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.

இந்த உப மின்சார நிலையத்தை தரம் உயர்த்துவதற்கு ஏற்கெனவே நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.' என்றார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 45,000 மின்பாவனையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X