2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு விருது

Niroshini   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு சுகாதார அமைச்சினால் சிறந்த கிராமிய உணவு, தாய் பராமரிப்புக் குழு விருது வழங்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய தாய், சேய்நல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம். பஸால் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சுகாதார வைத்தியதிகாரி அலுவலக பிரிவுகள் தோறும் மருத்துவ மாது தலைமையில் கிராமிய சிறந்த உணவு குழு அமைக்கப்பட்டு கிராமங்கள் தோறும் பெண் நோயியல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பரிசோதனை மற்றும் வீட்டு வன்முறைகளை கண்காணித்து சிறந்த முறையில் வழி நடத்துவதற்காக இக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், அமைக்கப்பட்டுள்ள குழுவானது சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் சிறந்த முறையில் இயங்கி வருவதற்காகவும் மக்கள் மத்தியில் இவ்வாறான குழுக்கள் மூலம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கிராமங்களில் சிறந்த சுகாதார சேவையை வழங்கி வருவதற்காகவுமே இவ் விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு மாத்திரமே இவ் விருது கிடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த கிராமிய உணவுக் குழு, தீகவாபி கிராமத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .